Tuesday 7th of May 2024 12:44:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஜகமே தந்திரம் டீரெய்லர் வெளியானது: தனுஷ் ரசிகர்கனை கவர்ந்த 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா'!

ஜகமே தந்திரம் டீரெய்லர் வெளியானது: தனுஷ் ரசிகர்கனை கவர்ந்த 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா'!


நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தனுஷ் பேசும் 'சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா' காட்சி தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அதில் தனுஷ் பேசும் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE